ஜெலண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் தி ஜெலண்ட். இந்த படத்தின் மூலமாக ஊர்வசி ரவுத்தாலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாக இருக்கிறார். இந்த படம் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி இருக்கிறது. பிரம்மாண்டமாக உருவான இந்த படம் தமிழ் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் 2500க்கும் அதிகமான திரையரங்குகளில் ஜூலை 28ஆம் தேதி அன்று வெளியாகி விமர்சனங்களை பெற்றுள்ளது.
இந்த சூழலில் சரவணன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. காதல் ஆக்சன் நகைச்சுவை நிறைந்த சமூக அக்கறை உள்ள படமாக இருக்க வேண்டும் அதுதான் பொதுமக்களை ரசிக்க செய்யும் என இயக்குனர்களிடம் கோரிக்கை விடுத்து ஜெலண்ட் சரவணன் கதை கேட்க தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.