Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கத்தரிகோலின் உதவியில் பைக் திருட்டு” 4 பேர் கைது…16 பைக் பறிமுதல்!!..

 அயனாவரத்தில்  கத்தரிகோலின் உதவியுடன் இருசக்கர வாகனங்களின் பூட்டை திறந்து திருடிய 4 கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை அயனாவரம்  அடுத்த  நியூ ஆவடி சாலையில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்திவரும் சண்முகம் என்பவர்  2 பேர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக போலீசில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக கணேஷ் குமார், செல்லையா  ஆகிய  இருவரிடம் விசாரணை நடத்தி  அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகன பதிவு எண்னை  ஆய்வு செய்ததில் அது போலி எண்  என்பது தெரிய வந்தது.

பின்னர் அவர்கள்  இருவரையும்  கைது  செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும் கத்தரிகோலின் உதவியுடன் பூட்டை திறந்து இருசக்கர வாகனங்களை கடத்தியது தெரியவந்தது.  மேலும் அவர்கள் கொடுத்த  தகவல்களின் பெயரில் திருத்தணியை சேர்ந்த செந்தில் குமார், பார்த்திபன் ஆகியோரும் பிடிபட்டனர்.  இந்த 4 பேர் அடங்கிய கும்பல் இரு சக்கர வாகனங்களை  கடத்தி வெளியூர்களுக்கு  விற்பனை செய்ததும் தெரிய வந்தது.  அவர்களிடம் இருந்து 16 இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |