கத்தரிக்காய் துவையல் தேவையான பொருள்கள்:
பெரிய கத்தரிக்காய் – 3
மிளகாய் வற்றல் – 8
உளுந்தம் பருப்பு – 2 மேஜைக்கரண்டி
பெருங்காயம் – சிறிதளவு
புளி – சிறிதளவு தேங்காய் – 1 முடி
செய்முறை:
முதலில் பெரிய கத்தரிக்காய்களை எடுத்து அதன் மேல் எண்ணெய் தடவி அடுப்பில் சுட்டு எடுத்து கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து, அதில் எண்ணெயை ஊற்றி உளுந்தம் பருப்பு, பச்சை மிளகாய், பெருங்காயம் அனைத்தையும் நன்கு சிவக்க வதக்கி கொள்ளவும்.
மேலும் மிக்ஸி ஜாரில் தேங்காய், புளி, உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து நன்கு அரைக்கவும். பிறகு சுட்ட கத்தரிக்காயின் தோல் நீக்கி விட்டு அதனுடன் அரைத்து கொள்ளவும்.
இதனை புளி சேர்க்காமலும் செய்யலாம். உளுந்தம் பருப்புக்கு பதிலாக கடலைப்பருப்பை சேர்த்து கொள்ளலாம்.