Categories
உலக செய்திகள்

கத்தார்: 29 நாய்கள் சுட்டுக்கொலை…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

கத்தார் தலை நகர் தோஹா அருகில் 29 நாய்கள் சுட்டுகொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் தோஹா அருகேயுள்ள தொழிற்சாலை பகுதியில் பெரும்பாலான தெரு நாய்கள் சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இப்பகுதிக்குள் சில நபர்கள் துப்பாக்கியுடன் நுழைந்தனர். அப்போது அவர்களை பாதுகாவலர்கள் தடுத்தபோது துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளனர். இதனையடுத்து உள்ளே சென்ற அவர்கள் சரமாரியாக நாய்களை சுட்டுத் தள்ளினர்.

இதனால் குட்டிநாய்கள் உட்பட மொத்தம் 29 நாய்கள் பரிதாபமாக இறந்தது. இதற்கிடையில் பல நாய்கள் குண்டுபாய்ந்து படுகாயமடைந்தது. இத்தகவலை அந்த நாட்டின் மீட்பு தொண்டு நிறுவனமான பாவ்ஸ் தெரிவித்து இருக்கிறது. சுட்டு கொல்லப்பட்ட நாய்களில் ஒன்று தங்கள் மகன் ஒருவரை கடித்ததால் துப்பாக்கிசூடு நடத்தியதாக அந்த கும்பல் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்திற்கு அங்குள்ள பொதுமக்களும் இணையவாசிகளும் தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |