தனக்கு எதுவும் செய்யவில்லை என்று பெற்ற தந்தையை மகனே கத்தியால் குத்திய சம்பவம் காரைக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரியக்குடி பகுதியில் சொர்ணலிங்கம் என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் கோழிக்கறிகடை ஒன்று வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு பிரதீப் ராஜ் என்ற மகனும், மகள்களும் உள்ளனர். இந்நிலையில் பிரதீப் ராஜ் தனது தந்தையிடம் தனக்கு எதுவுமே இதுவரை நீங்கள் செய்ததில்லை என்று கூறியுள்ளார். மேலும் மகள்களுக்கு மட்டுமே நீங்கள் எல்லாம் செய்வதாகவும் கூறி தந்தையிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
பின் வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியதில் பிரதீப் ராஜ் அருகில் இருந்த கோழி வெட்டும் கத்தியை எடுத்து தந்தை தலையின் பின்புறத்தில் குத்தியுள்ளார். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த சொர்ணலிங்கம் சிகிச்சைக்காக சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிருந்த காரைக்குடி தெற்கு காவல் துறையினர் பிரதீப் ராஜ் மீது வழக்கு பதிந்து பின் கைது செய்தனர்.