கர்ப்பிணியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொண்டேகவுண்டன் பாளையத்தில் பீகாரை சேர்ந்த பித்கார் மாந்தி-மம்தா தேவி தம்பதியினர் தங்கியிருந்து தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகன்களும், மருமகளும் இருக்கின்றனர். தற்போது மம்தா தேவி கர்ப்பமாக இருக்கிறார். நேற்று மம்தா தனது கணவரிடம் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி வருமாறு கூறினார். ஆனால் மாந்தி மளிகை பொருட்கள் வாங்கி வராமல் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.
இதனை மம்தா கண்டித்த போது கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மாந்தி தனது மனைவியை கத்தியால் குத்தியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மம்தாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி விட்டனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மாந்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.