திருவாரூரில் துணிக்கடையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் நேரு சாலையில் உள்ள துணிக்கடைக்கு வேலைக்கு வந்த பரத் என்பவரை பார்க்க வந்ததாக கூறிய நான்கு சிறுவர்கள் அவரை கத்தி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகின்றது. பின்னர் கடைக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி கடைக்காரரிடம் இருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து சென்றனர். படுகாயமடைந்த பரத் காவல்துறையில் புகார் அளித்ததால் அந்த நான்கு சிறுவர்களையும் காவல்துறையினர் கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.