தலை முடியை கொள்ளையடித்து சென்ற நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள திண்டல் கார்டன் பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தலைமுடி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும்2 மகன்கள் இருக்கின்றனர். கடந்த ஜூன் மாதம் சுதாகர் ஆந்திராவிலிருந்து தலைமுடி வாங்கி வந்துள்ளார். இவற்றின் மதிப்பு 7 லட்ச ரூபாய் ஆகும். கடந்த மாதம் சுதாகரன் செல்போனுக்கு ஒருவர் தொடர்பு கொண்டு தலைமுடி வேண்டும் என்று கேட்டுள்ளார். அதன் பிறகு சுதாகர் தன்னுடைய வீட்டு விலாசத்தை அந்த நபருக்கு கூறியுள்ளார்.
இதனையடுத்து சுதாகரின் வீட்டிற்கு வந்த சில நபர்கள் கத்தியை காட்டி சுதாகர் மற்றும் அவரின் குடும்பத்தினரை மிரட்டி தலைமுடியை திருடி சென்றுள்ளனர். இது குறித்து சுதாகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சென்னையில் பதுங்கி இருந்த பொன் முருகன் மற்றும் பாபா முருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் வழக்கில் தலைமுறைவாக உள்ள 2 நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.