Categories
மாநில செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டி அதிமுக பிரமுகர் பாலியல் தொல்லை…. பரபரப்பு சம்பவம்….!!!!

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே பூலாம்பாடி பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதிமுக நகர செயலாளர். இவர் அதே பகுதியை சேர்ந்த தனியார் எரிவாயு நிறுவனம் நடத்தி வரும் திருமணமான பெண் ஒருவருக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். அந்தப் பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை சாலையில் நடந்து சென்ற அந்தப் பெண்ணிடம் வினோத் தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தன் ஆசைக்கு இணங்க மறுத்ததால் எரிவாயு நிலையத்தில் வைத்து உயிரோடு கொளுத்தி விடுவதாக மிரட்டியுள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்ட அந்தப் பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து வினோத்தை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |