Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டி…. உணவு விநியோகம் செய்பவரிடம் வழிப்பறி…. போலீஸ் அதிரடி….!!!!

சென்னை மாவட்டத்தில் சைதாப்பேட்டை பகுதியில் சரவணக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஆன்லைன் மூலம் உணவு விநியோகம் செய்யும் வேலையை செய்து வருகின்றார். இந்த நிலையில் இவர் நேற்று அசோக் பில்லர் அருகே வாடிக்கையாளர் ஒருவருக்கு விநியோகம் செய்வதற்காக பீட்சா, பர்கர் போன்றவற்றை எடுத்துச் சென்றுள்ளார். அந்த சமயத்தில் அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் அவரை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்த பணம், செல்போன் மற்றும் பீட்சா, பர்கரையும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

இது குறித்து சரவணகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். இதில் செங்குன்றம் பகுதியை சேர்ந்த கரண் என்பவர் இந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் அவர் கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம் போன்ற பகுதிகளிலும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Categories

Tech |