பொது இடத்தில் அரிவாளுடன் சுற்றி திரிந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சந்திப்பு ரயில் நிலையம் செல்லும் த. மு நோட்டில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள கடையின் முன்பு திடீரென கூச்சல் சத்தம் கேட்டதால் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று பார்த்துள்ளனர். அப்போது அரிவாளுடன் நின்றுகொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர்.
அந்த விசாரணையில் அவர்கள் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அரிவாளுடன் இரண்டு பேரும் சுற்றித்திரிந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.