Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கத்தி முனையில் பாலியல் பலாத்காரம்…. ஆண் நண்பர் உள்பட 2 பேரிடம் விசாரணை…. பரபரப்பு சம்பவம்….!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரை சுற்றி இருக்கும் தொழிற்சாலைகளில் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பெண்களும், ஆண்களும் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் காவலன் செயலியில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது, நான் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் தங்கியிருந்து ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறேன். கடந்த 2 நாட்களுக்கு முன்பு எனது ஆண் நண்பருடன் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உணவு சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு நடந்து வந்தேன்.

அப்போது பின் தொடர்ந்து வந்த இரண்டு பேர் என்னை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு தூக்கி சென்று கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்தனர் என கூறியுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் பெண்ணின் ஆண் நண்பர் உட்பட இரண்டு பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |