Categories
உலக செய்திகள்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பதவி விலகல்…. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போப் ஆண்டவர்…!!!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பதவி விலகல் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ரோம் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக போப் ஆண்டவர் பிரான்சிஸ் (85) இருக்கிறார். இவர் சமீப காலமாக மூட்டு வலி பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதால், கடந்த ஒரு மாதமாக சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகிறார். இந்நூலையில் போப் ஆண்டவர் மூட்டு வலி பிரச்சனை மற்றும் வயது முதிர்வின் காரணமாக பதவி விலகப் போகிறார் என்ற தகவல்கள் பரவியது. இதனையடுத்து மே மாத இறுதியில் பதவி விலகல் குறித்த அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் போப் ஆண்டவர் பிரபல பத்திரிகை நிறுவனத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் பதவி விலகும் எண்ணம் எனக்கு இல்லை எனவும், ஜூலை 24 முதல் 30-ம் தேதி வரை கனடா நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினார். இந்த பயணத்தின் போது உக்ரைன் நாட்டிற்கு செல்வதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது என்றார். இதன்முலம்  போப் ஆண்டவரின் பதவி விலகப் போவதில்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது.

Categories

Tech |