ரோம் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக போப் ஆண்டவர் பிரான்சிஸ் (85) இருக்கிறார். இவர் சமீப காலமாக மூட்டு வலி பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதால், கடந்த ஒரு மாதமாக சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகிறார். இந்நூலையில் போப் ஆண்டவர் மூட்டு வலி பிரச்சனை மற்றும் வயது முதிர்வின் காரணமாக பதவி விலகப் போகிறார் என்ற தகவல்கள் பரவியது. இதனையடுத்து மே மாத இறுதியில் பதவி விலகல் குறித்த அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் போப் ஆண்டவர் பிரபல பத்திரிகை நிறுவனத்திற்கு பேட்டி கொடுத்தார். அதில் பதவி விலகும் எண்ணம் எனக்கு இல்லை எனவும், ஜூலை 24 முதல் 30-ம் தேதி வரை கனடா நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினார். அதன்படி 6 நாட்கள் கனடாவில் பயணத்தை முடித்த போப்பாண்டவர் பயணம் முடிந்து சொந்த நாட்டிற்கு விமானத்தில் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது விமானத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அவர் இதுபோன்று பயணம் மேற்கொள்வதற்கு இனி என்னுடைய உடம்பு ஒத்துழைக்காது என்றும், நான் பதவி விலகுவது குறித்து இதுவரை யோசிக்கவில்லை என்றும், அதற்கான கதவு திறந்து இருந்த போதிலும் நான் என்னால் இயன்றவரை தேவாலயத்திற்கு சேவை செய்ய விரும்புகிறேன் எனவும் கூறினார். மேலும் பதவி விலகுவது தொடர்பாக யோசிக்க வேண்டும் எனவும் போப்பாண்டவர் கூறியுள்ளார்.