Categories
தேசிய செய்திகள்

கந்துவட்டி தொல்லை: விரக்தியில் தம்பதியினர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்….!!!!

உத்தரப்பிரதேசத்தின் ஷாஜகான்பூர் பகுதியில் கந்துவட்டிக் கொடுமையால் தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் கூறியிருப்பதாவது “தற்கொலை செய்துகொண்டது சதீஷ் சந்திரா (42) மற்றும் அவரது மனைவி மன்சா தேவி (40) என்பது தெரியவந்தது. அவர்கள் இரண்டு பேரும் பசந்த் விகார் காலனியில் வசித்து வருகின்றனர். இதில் சதீஷ் சந்திரா மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவரது மனைவி அருகிலுள்ள கட்டிலில் கழுத்தில் கயிற்றுடன் இறந்துகிடந்தார்.

இதனிடையில் சதீஷ் சந்திராவின் பாக்கெட்டில் ஒரு கடிதம் இருந்தது. அதில் ஒருவரிடம் ரூபாய்.1 லட்சமும், மற்றொருவரிடம் ரூபாய்.1.50 லட்சமும் கடன் வாங்கியதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. வாங்கியக் கடனை முழுவதும் செலுத்திவிட்ட பிறகும் வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் அவர்களிடம் பணம்கேட்டு அழுத்தம் கொடுத்ததாகவும் அக்கடிதத்தில் இருந்தது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என்று கூறினார்.

Categories

Tech |