கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மூலச்சல் ஆலுவிளை பகுதியில் சீமான் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் விலவூர் பேரூராட்சி துணைத் தலைவர் ஞான ஜெபின், அவரது மனைவி பெனிலா, நண்பர் அஜீமோன் ஆகிய 3 பேரும் இணைந்து கந்துவட்டி வசூலிக்கின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட குற்றப்பிரிவுக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி நேற்று முன்தினம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா, சப்- இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் ஆகியோர் ஞானஜெபினின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தி வீட்டு கடன் பத்திரம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றினர். மேலும் ஞானஜெபின் அவரது மனைவி, நண்பர் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.