வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் தினேஷ்குமார் (21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அவசர தேவைக்காக ஒருவரிடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். இந்நிலையில் தினேஷ்குமார் தான் வாங்கிய பணத்திற்கு வட்டியை கட்டியதோடு கடனையும் முழுமையாக அடைத்துள்ளார். இருப்பினும் பணம் கொடுத்தவர்கள் பேராசையின் காரணமாக மேற்கொண்டு கந்துவட்டி தருமாறு தினேஷ்குமாரை தொடர்ந்து தொந்தரவு செய்து மிரட்டி வந்துள்ளனர்.
https://twitter.com/SathishPT123/status/1543494767065018368
இதனால் மிகுந்த வேதனையில் இருந்த தினேஷ்குமார் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தினேஷ் குமாரின் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தினேஷ்குமார் தான் இறப்பதற்கு முன்பாக தன்னுடைய தாயிடம் கூற வேண்டும் என விரும்பியதை ஒரு வீடியோவாக எடுத்து அனுப்பியுள்ளார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும் எந்த பிரச்சனைக்கும் தற்கொலை ஒன்றே முடிவாகாது. எனவே யாருக்கேனும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றினால் உடனடியாக மாநில உதவி எண் 104 – ஐ தொடர்பு கொள்ளுங்கள்.