Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கந்து வட்டி கேட்டு தொந்தரவு”…. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்த பெண்…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள விஜயமங்கலம் ஊத்துக்குளி ரோடு பகுதியில் டெய்லரான செங்காவேரி(24) என்பவர் வருகிறார். இவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு எங்கள் பகுதியில் வசிக்கும் ஒருவரிடம் 3/4 பவுன் தங்க சங்கிலி, இருசக்கர வாகனம், ஆகியவற்றை அடமானம் வைத்து 1 லட்ச ரூபாய் கடன் வாங்கினேன். அதற்கு மாதம் தோறும் 10 ஆயிரம் ரூபாய் வட்டி செலுத்தி இதுவரை 48 ஆயிரம் ரூபாய் வட்டி கொடுத்துள்ளேன்.

கடந்த மாதம் என்னால் வட்டி தொகையை சரியாக கொடுக்க முடியவில்லை. இதனால் அந்த நபர் 2 மாத வட்டி தொகையாக 23 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என வற்புறுத்தினார். அதற்கு கால அவகாசம் கொடுங்கள் என கேட்டதற்கு என்னையும் எனது கணவரையும் வேலைக்கு செல்ல விடாமல் மிரட்டி வருகிறார். எனவே கந்து வட்டி கேட்டு மிரட்டும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |