Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கந்து வட்டி கேட்டு மிரட்டல்…. சகோதரர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பாப்டிப்ஸ் காலனியில் கூலி தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் சங்கீத்குமார், பாலா என்ற சகோதரர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வட்டிக்கு பணம் கொடுத்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரவி குடும்ப கஷ்டம் காரணமாக அண்ணன், தம்பியிடம் 30 ஆயிரம் வட்டிக்கு வாங்கியுள்ளார். அவர்கள் 3 ஆயிரம் பிடித்தம் செய்து, 27 ஆயிரம் ரூபாயை கொடுத்து, மாதத் தவணையாக 3000 ரூபாய் தவறாமல் செலுத்த வேண்டும் என தெரிவித்தனர். இதனால் ரவி தொடர்ந்து வட்டி கொடுத்து வந்துள்ளார்.

ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 6 மாதங்களாக வட்டி கட்ட முடியவில்லை. நேற்று முன்தினம் அண்ணன், தம்பி இருவரும் ரவியின் வீட்டிற்கு சென்று வட்டியும், அசலும் சேர்த்து 55 ஆயிரம் ரூபாயை 1-ஆம் தேதிக்குள் தர வேண்டும் என கூறி மிரட்டியுள்ளனர். இதுகுறித்து ரவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கந்துவட்டி கேட்டு மிரட்டிய குற்றத்திற்காக சங்கீத்குமார் மற்றும் பாலா ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |