Categories
உலக செய்திகள்

கனடாவில் விபத்தில் பலியான இளைஞன்…. இலங்கையில் இரங்கல்… நெகிழ்ச்சியடைந்த இளைஞனின் தந்தை ..!!

கனடாவில் விபத்தில் இறந்த இளைஞனுக்காக இலங்கையில் கண்ணீர் அஞ்சலி செலுத்தியதால் இளைஞனின் தந்தை நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

கனடாவில் 19 வயதான நீல் லிஙக்ளைடேர் என்ற இளைஞன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சாலை விபத்தில் இறந்துள்ளான். ஏற்கனவே அந்த நெடுஞ்சாலை மிகவும் குறுகியது அதனால் அடிக்கடி அங்கு விபத்துகள் ஏற்படுவதால் பலர் புகார் அளித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே  அப்பகுதியில் மூன்று விபத்துகள் நிகழ்ந்துள்ளது. அதில் ஒருவர்தான் ஹாக்கி வீரரான நீல் லிஙக்ளைடேர்.

அவரின் தந்தையான டேவிட் லிஙக்ளைடேர் தன் மகனைப் பற்றிக் கூறுகையில், தனது மகன் எல்லோராலும் நேசிக்கப்பட்டதாகவும் ,எல்லாரையும் நேசித்ததாகவும் கூறியுள்ளார்.இதனால் பலரும்  நீலிற்கு  சமூக வலைத்தளங்களிலும் அஞ்சலி செலுத்தி வருகின்ற நிலையில் இலங்கையிலிருந்தும் பலர் இரங்கல் தெரிவிப்பதாக கூறி டேவிட் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

Categories

Tech |