Categories
உலக செய்திகள்

கனடாவில் பரபரப்பு…. “துப்பாக்கியுடன் நடமாடிய இளைஞர்”… போலீசாரின் அதிரடி முடிவு …!!!!!!

கனடாவில் தொடக்கப் பள்ளிக்கு அருகே இளைஞர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் நடனமாடிக்கொண்டிருந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் 18 வயது இளைஞர் புகுந்து சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தி 19 சிறுவர்கள் உட்பட 21 பேரை கொன்று குவித்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவில் டொரண்டோ நகரில் ஒரு தொடக்க பள்ளிக்கு அருகே இளைஞர் ஒருவர் கையில் துப்பாக்கி வைத்திருந்தபடி சுற்றிக் கொண்டிருந்தார்.

இதனால் அந்த பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த மூன்று தொடக்கப் பள்ளிகள் உடனடியாக மூடப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைந்து துப்பாக்கியுடன் நடமாடி ய நபரை சுற்றி வளைத்துள்ளனர். அதன்பின் போலீசார் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் இது பற்றிய கூடுதல் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Categories

Tech |