கனடாவில் வாடகை வீட்டில் வசித்து வரும் குறைந்த வருவாய் கொண்ட ஒரு சில பேருக்கு அரசு 50 டாலர்கள் உதவித்தொகை வழங்குவதாக நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் உதவித்தொகையை பெற விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 15 வயது உடையவர்களாகவும், 2022 -ஆம் வருடத்தில் தங்கள் 2021 -ஆம் ஆண்டு வருவாயில் 30 சதவீதத்தையாவது வாடகையாக செலுத்தி இருக்க வேண்டும்.
அது மட்டுமல்லாமல் 35,000 டாலர்கள் அல்லது அதற்கு குறைவான வருவாய் கொண்ட குடும்பங்களாகவோஅல்லது 20,000 டாலர்கள் அல்லது அதற்கு குறைவான வருவாய் கொண்ட தனிநபராகவோ இருக்க வேண்டும். 2021 -ஆம் வருடத்திற்கான வருமான வரி தாக்கல் செய்திருக்க வேண்டும். இதற்கு தகுதியுடையவர்கள் பெடரல் அரசின் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் தங்கள் வாடகை செலுத்துவதற்கான ஆதாரத்தையும் அதனுடன் சமர்ப்பிக்க வேண்டும்.