கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சேரன்மாநகரில் ஹரிக்குமார் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகனுக்கு வேலை தேடி வந்த போது சென்னையை சேர்ந்த நவாஸ் அகமது என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் உங்களது மகனுக்கு கனடாவில் நல்ல வேலை வாங்கி தருகிறேன் என நவாஸ் அகமது கூறியுள்ளார். அவர் கூறியதை நம்பி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பல்வேறு தவணைகளாக ஹரிகுமார் ரூ. 7,56,200 பணத்தை நவாஸ் அகமதுவிடம் கொடுத்துள்ளார்.
ஆனால் கூறியபடி அவர் வேலை வாங்கி கொடுக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஹரிகுமார் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நவாஸ் அகமதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.