கனடாவில் இருக்கும் பெண் ஒருவருக்கு லாட்டரியில் 5 லட்சம் டாலர்கள் பரிசு விழுந்ததால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
கனடாவில் Nanaimo பகுதியில் வசித்து வரும் Debra Allen என்ற பெண், கடந்த மாதம் 28ஆம் தேதி லாட்டரி டிக்கெட் வாங்கி இருக்கிறார். அதன் பிறகு அந்த லாட்டரியில் அவருக்கு பரிசு விழுந்துள்ளதாக அவருடன் அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர்கள் கூறியுள்ளனர். இதனைக்கேட்ட அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “பரிசு விழுந்திருப்பதை அறிந்தவுடன் என் அலுவலக நண்பர்களுடன் சேர்ந்து நானும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தேன். லாட்டரியில் பெரிய பரிசு வெல்ல வேண்டும் என்ற கனவு நீண்ட நாட்களாக எனக்கு இருந்து வந்தது.
மேலும் பரிசு பணத்தில் பெரும் பகுதியை ஓய்வு காலத்திற்கு பின்னர் எனது கணவருடன் சேர்ந்து செலவிடுவதற்காக சேமிக்க திட்டமிட்டுள்ளேன். அதுமட்டுமன்றி வீடு போன்ற அனைத்து வசதிகளையும் கொண்ட recreational வாகனம் வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளேன். ஏனென்றால் வான்கூவர் தீவில் முகாம் இடுவதற்கு எனக்கு நீண்ட நாட்களாக மிகுந்த ஆசை உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.