Categories
உலக செய்திகள்

கனடாவை தாக்கிய சக்தி வாய்ந்த புயல்… “வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை”… மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்…!!!!

அட்லாண்டிக் கடலில் உருவான சக்தி வாய்ந்த பியோனா புயல் கனடா நோக்கி நகர்ந்துள்ளது. இதனை அடுத்து கன்னட வரலாற்றில் மிகவும் கடுமையான புயல்களில் ஒன்றாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த சூழலில் தற்போது கனடாவை தாக்கி இருக்கும் பியோனா புயலால் நோவாஸ் கோடியா மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஏராளமான வீடுகள் இருந்து சேதம் அடைந்துள்ளது.

மேலும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் பலர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றார்கள். மேலும் ஒரு சில பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் குடியிருப்பு பகுதிகளில் ஏராளமான மரங்கள் முறிந்தும் வேரோடு சாய்ந்தும் கிடைக்கின்றது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.  நியூ பவுண்டேஷன் லேண்ட் மற்றும் லாப்லடரில் உள்ள பல வீடுகள் சூறாவளியால் இடிந்து விழுந்துள்ளது.

மேலும் பல பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட ராணுவத்தை அனுப்பி இருப்பதாக கன்னட பிரதமர் கூறியுள்ளார். புயல் பாதிப்பு காரணமாக ஜப்பானில் ஷின்சோ அபேயின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள இருந்த பயணத்திட்டத்தை கன்னட பிரதமர் ரத்து செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Categories

Tech |