கனடாநாட்டின் ஓன்டோரியா நகரில் விஷ்ணுமந்திர் எனும் இடத்தில் மகாத்மா காந்தியின் உருவச் சிலையானது இருக்கிறது. இந்நிலையில் இந்த சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்து இருக்கிறது. இது குறித்து டொரோன்டோ நகரில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
காழ்புணர்ச்சியின் காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வெறுக்கத்தக்க குற்றச்செயல் கனடாவில் வாழும் இந்திய மக்களின் மனதை புண்படுத்தி இருக்கிறது. இது பற்றி உடனே விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.