Categories
உலக செய்திகள்

கனடா எல்லைக்குள் புகுந்த நபர்…. யாருன்னு தெரியுமா?…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

சட்டவிரோதமாக கனடா எல்லைக்குள் புகுந்த ஒருவரை விரைந்து பிடித்த கனேடிய காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 31ஆம் தேதி JohnWright எனும் அமெரிக்கர், கனடா எல்லைக்குள் நுழைந்து உள்ளார். இதையடுத்து விரைவாக அவரைக் கைது செய்த கனேடிய காவல்துறையினர் அவரது உடைமைகளை சோதனையிட்ட போது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அவர் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தது மட்டுமின்றி, குண்டுகள் நிரப்பப்பட்ட 3 துப்பாக்கிகள் மற்றும் stun gun ஒன்றும் அவரிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் கனடாவுக்கு வந்த கனேடிய பெண் ஒருவருடன், cab ஒன்றில் ஏறி கனடாவுக்குள் Wright நுழைந்துள்ளார்.

அதனை தொடர்ந்து ஆயுதங்களுடன் நாட்டுக்குள் நுழைந்த ஒருவரை அடையாளம் கண்டு, விரைவாக அவரைக் கைது செய்ததோடு, கனேடியர்களை அச்சுறுத்தல் ஒன்றில் இருந்து காப்பாற்றியுள்ள காவல்துறையினரின் பணி பாராட்டத்தக்கது என Supt.Bert Ferreira என்னும் அதிகாரி தெரிவித்துள்ளார். கனடாவுக்குள் நுழைந்த அந்நபரை கைது செய்தது எப்படி என்பது தொடர்பாக விபரங்களை வெளியிடாத காவல்துறையினர் அதிநவீன தொழில்நுட்பம் ஒன்றைப் பயன்படுத்தி அவரைக் கைது செய்ததாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |