மேற்படிப்பு மற்றும் வேலைக்காக கனடா செல்லும் இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், உயர் கல்வி மற்றும் வேலைக்காக வட அமெரிக்க நாடான கனடா செல்லும் அங்கு வசிக்கும்இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கனடாவில் பிராந்திய வன்முறை,இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல்களில் சிக்காமல் கவனமுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் ஓட்டாவா , டோராண்டோ, வான்கூவர் ஆகிய இடங்களில் உள்ள இந்திய தூதரகங்களில் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக தூதரகங்களை தொடர்பு கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.