Categories
உலக செய்திகள்

கனடா தடுப்பூசிகளை கொள்ளையடிக்கிறதா..? பரபரப்பு குற்றச்சாட்டு.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கனடா அரசு வளர்ந்து வரும் நாடுகளிடமிருந்து தடுப்பூசிகளை திருடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

சீரம் இன்ஸ்ட்டியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கு ஒரு பில்லியன் டோஸ்கள் தடுப்பூசியை அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் கனடாவின் பொதுச்சேவை மற்றும் கொள்முதல் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் அறிக்கை ஒன்றை கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டிருந்தார்.

அதில் வரும் ஜூன் மாதம் இரண்டாம் தேதிக்குள் 3.9 மில்லியன் ஆஸ்ட்ராஜெனகா /கோவிஷீல்டு தடுப்பூசிகள் கனடாவிற்கு அளிக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் இந்தியாவின் சீரம் இன்ஸ்டியூட்டில் இருந்து 2 மில்லியன் டோஸ்கள்களும் கோவாக்ஸ் நிறுவனத்திடமிருந்து 1.9 மில்லியன் டோஸ்களும் வரவிருப்பதாக அவர் கூறியிருந்தார்.

எனினும் இந்த அறிவிப்பால் தடுப்பூசிகளை கொள்ளை அடிப்பது போல் கனடா செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மேலும் வளர்ந்து வரும் நாடுகளிலிருந்து ட்ரூடோ அரசாங்கம் தடுப்பூசிகளை கொள்ளை அடிப்பதாக Ottawa பல்கலைக்கழக தொற்று நோய்கள் மற்றும் பொது சுகாதாரத்துறையியல் பேராசிரியராக Ameer Attaran குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும் இதனால் எத்தனை நபர்கள் இதன் காரணமாக கொலை செய்யப்பட போகிறார்களோ? என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளார்.

Categories

Tech |