கனடாவில் வாழும் தம்பதியினருக்கு லாட்டரியில் முதல் பரிசான$70,000,000 பெரிய தொகை கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்தனர்.
கனடா நாட்டில் ஒன்றாறியோ நகரை சேர்ந்தவர்கள் மார்க் – தோரோத்தி தம்பதியினர். இவர்கள் இருவரும் லாட்டரி சீட்டுகளை வாங்குவதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். இதன் காரணமாக இவர்கள் லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்தனர். ஆனால் அவர்கள் வாங்கிய லாட்டரி சீட்டுகளில் பெருமளவு தொகை ஏதும், இவர்களுக்கு கிடைத்ததில்லை. ஆனால் இவர்கள் முயற்சியை கைவிடவில்லை ,தொடர்ந்து சீட்டுகளை வாங்கி கொண்டிருந்தனர். இந்நிலையில் தற்சமயம் வழக்கம்போல் ஒரு லாட்டரி சீட்டு வாங்கினர். ஆனால் அந்த லாட்டரி சீட்டு மிகப் பெரிய தொகை கிடைக்கும் என்று அப்போது தெரியவில்லை.
இதைப்பற்றி அவர்கள் கூறும்போது, நாங்கள் இவ்வளவு பெரிய தொகையை லாட்டரியில் பெறுவோம் என்று ,கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை என்றும், சொல்ல வார்த்தைகள் இல்லாமல் மகிழ்ச்சியில் வாயடைத்து நிற்கிறோம். இவ்வாறு தாங்கள் லாட்டரி சீட்டில் வெற்றியடைந்ததை ,ஆனந்த கண்ணீருடன் தம்பதியினர் தெரிவித்தனர். நாங்கள் வெற்றி பெற்ற பணத்தில் எங்களுக்கு என்று தனி வீடு ,எங்கள் குழந்தைகளுக்கு படிப்பு செலவு, வாகனங்கள் போன்ற தேவையை பூர்த்தி செய்ய முடிவு செய்துள்ளோம் என்று கூறினர். நாங்கள் இந்த உலகத்தை தொலைக்காட்சி வழியாக மட்டுமே பார்த்துள்ளோம் என்றும் , எனவே இந்த பணத்தில் நானும் என் மனைவியும் இந்த நாட்டை முழுவதையும் சுற்றிப் பார்ப்போம் என்று அவர் கணவர் மார்க் தெரிவித்தார்.