கனடா பாராளுமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதால் சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது .
உய்குர் சிறுபான்மையினரை சீனா இனப்படுகொலை செய்வதாக கனடா பாராளுமன்றத்தில் சட்டபூர்வ அதிகாரம் இல்லாத தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதற்க்கு சீனா பெரும் கண்டனம் தெரிவித்துள்ளது. கனடா இனப்படுகொலை’ தொடர்ந்தால் 2022 ஒலிம்பிக்கை சீனாவிலிருந்து மாற்றுமாறு சர்வதேச ஒலிம்பிக் குழுவிற்கு அழைப்பு விடுத்துதிருத்தும் ஒரு திருத்தம் நிறைவேற்றப்பட்டது. கனடா நாடாளுமன்றத்தில் 266-0 இந்த தீர்மானம் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது.
இருப்பினும் பிரதமர் ஜஸ்டிஸ் ட்ரரூடா மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் பெரும்பாலானோர் இந்த தீர்மானத்திற்கு வாக்களிக்கவில்லை. ஜஸ்டிஸ் ட்ரரூடா இனப்படுகொலை என்ற வார்த்தையை பயன்படுத்துவதை வன்மையாக கண்டித்தார். இது கடுமையாக வழிநடத்தப்பட்ட ஒரு சொல் தவறாக பயன்படுத்த வேண்டாம். அதனால் அது நம்மை பலவீனப்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
Xinjiang-ல் நடத்தப்படும் மனித உரிமை மீறல்கள் இனப்படுகொலை குறித்து சர்வதேச அளவில் கலந்து பேச வேண்டும் என்றும் கூறியுள்ளார். சீனா உய்குர் சிறுபான்மையினர் மீது நடத்துவது இனப்படுகொலை என்று கனடா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சீனா வன்மையாக கண்டிக்கிறது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.