Categories
உலக செய்திகள்

கனடா நாட்டின் அதிபருக்கு…. கொரோனா தொற்று உறுதி…. வெளியான தகவல்….!!!

கனடா நாட்டின் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கனடா நாட்டின் அதிபராக ஜஸ்டின் ட்ரூடோ இருக்கிறார். இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக பதிவிட்டுள்ளார். இந்நிலையில் அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ ஏற்கனவே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதால் வைரஸ் தொற்றின் தாக்கத்தில் இருந்து தான் நன்றாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கொரோனா‌‌ தடுப்பூசியை செலுத்தி கொள்ளுமாறு கூறியுள்ளார்.

இதன் மூலமாக நாட்டின் சுகாதார அமைப்பையும், நம்மையும், மற்றவர்களையும் பாதுகாப்போம் எனவும் கூறியுள்ளார். மேலும் கடந்த வாரம் அமெரிக்காவில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் கனடா அதிபர்  கலந்து கொண்டார். இவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து குடியேற்றம் உள்ளிட்ட நாடுகளை பாதிக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |