Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கனடா நாட்டுக்கு வேலைக்கு அனுப்புறேன்…. பல லட்சம் ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வீரப்பட்டியில் பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கரூரில் வசித்து வரும் மோகன்பாபு என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கனடா நாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பிரசாத்  மோகன்பாபுவிடமிருந்து ரூ. 30 லட்சத்தை வாங்கிவிட்டு போலி விசாவை கொடுத்து ஏமாற்றியுள்ளார். இதனையடுத்து போலியான விசாவை கொடுத்ததையரிந்த மோகன்பாபு பிரசாத்திடம் சண்டை போட்டுள்ளார்.

அதன்பின் பிரசாத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி ரூ. 30,000-த்தை வாங்கி கொண்டார். மேலும் மீதமுள்ள பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியதால் பிரசாத் மீது மோகன்பாபு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த காவல்துறையினர் பிரசாத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |