கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா இதுவரை 123 நாடுகளுக்கு பரவியுள்ளது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,627 லிருந்து 4,962ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே லண்டன் சுகாதாரத்துறை அமைச்சர் நாடின் டோரிஸ்க்கு வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி கிரிகோரிக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் சென்று திரும்பியிருந்த சோபி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தனிமைப்படுத்தப்பட்டார். இதையடுத்து இன்று நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், சோபிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றி அவர் தனிமைப் படுத்தப் பட்டிருக்கிறார் என்று தகவல் அளித்துள்ளனர். இதனால் இந்திய மதிப்பில் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.