Categories
உலக செய்திகள்

கனடா மற்றும் இந்தியாவால் கைவிடப்பட்டோம்.. தாயின் இறுதிச்சடங்கிற்கு வந்த குடும்பத்தின் நிலை..!!

கனடா குடியுரிமை பெற்ற குடும்பம் தாயின் இறுதிச்சடங்கிற்காக இந்திய வந்த நிலையில், பயண தடையால் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறது.  

கனடாவின் குடியுரிமை பெற்று Anurag Sharma என்பவரின் குடும்பத்தினர் கடந்த மார்ச் மாதத்தில் அவரது தாயின் இறுதிச் சடங்கிற்காக இந்தியாவிற்கு வந்துள்ளனர். இறுதி சடங்கு முடிவடைந்த பின்பு மே 2 கனடா செல்ல டிக்கெட்டுகள் முன்பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருவதால் கனடாவிற்கு செல்லும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

பயணம் ரத்தானதால் உடனடியாக 5 ஆம் தேதியன்று அமெரிக்காவின் வழியே கனடாவிற்கு செல்லக்கூடிய ஒரு விமானத்தில் டிக்கெட்டுகளை ன் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் மே 4 ஆம் தேதி அன்று அமெரிக்கா, தங்களது குடிமக்களில் நிரந்தரமான வாழிட உரிமம் உள்ளவர்கள் மட்டுமே இந்தியாவிலிருந்து வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்துவிட்டது.

அதாவது சர்மாவின் மனைவி கனடாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறிப்பிட்ட தொகையை சம்பளமாக வாங்கும் பணியை செய்து வருகிறார். எனவே கனடா செல்வதற்கு தாமதம் ஏற்படுவதால் அவரது ஊதியம் பறிபோவதோடு பணியை இழக்கும் நிலை ஏற்படும். மேலும் அவரது மகளும் இந்த மாதத்தில் புதிதாக பணியில் சேர உள்ளார்.

இது மட்டுமல்லாமல் Sharma புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளவேண்டியுள்ளது. இதனால் எப்படியாவது அதற்கு முன்பாக கனடா சென்று விடவேண்டும் என்று தவித்து வருகின்றனர். இதுகுறித்து ஷர்மா கூறியுள்ளதாவது, இந்தியாவில் தொற்று குறையுமா என்று தெரியவில்லை. இதனால் அமெரிக்கா போன்று கனடாவும் தங்கள் மக்கள் நாடு திரும்ப உதவலாம். மேலும் இந்தியாவில் நிலை இப்படியே தொடர்ந்தால் விமான தடை நீடிக்கப்படலாம். இப்போது நாங்கள் இந்தியா மற்றும் கனடாவால் முற்றிலுமாக கைவிடபட்டோம் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |