ஹான்ஸ் தீவு தொடர்பாக கனடாவிற்கும், டென்மார்க்கிற்கும் இடையே பல வருடங்களாக போர் நடந்து வருகிறது. இந்தப் போர் விஸ்கி போர் (அ) அகுவிட் போர் என அழைக்கப்படுகிறது. இந்த போர் கடந்த 1930-ம் ஆண்டில் இருந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஹான்ஸ் தீவிற்காக இரு நாட்டினரும் போர் புரிய மாட்டார்கள்.
அதற்கு பதிலாக இரு நாட்டினரும் தங்களுடைய கொடி மற்றும் தங்கள் நாட்டில் பிரபலமான விஸ்கி பாட்டில்களை ஹான்ஸ் தீவில் கொண்டு வைத்துவிடுவார்கள். இந்த 2 நாடுகளும் பல வருடங்களாக இப்படித்தான் சண்டை போடுகிறார்கள். மேலும் கொடி மற்றும் விஸ்கி பாட்டில்களை வைத்து சண்டை போடுவதால் இதை போலி மோதல் எனவும் அழைக்கப்படுகிறது.