Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கனமழையால் இடிந்து விழுந்த சுவர்…. அதிஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

அதிஷ்டவசமாக தாய் மற்றும் மகள்கள் உயிர் தப்பிவிட்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அப்சர்வேட்டரி பகுதியில் 43.7 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. இந்த தொடர் கனமழையின் காரணமாக நகருக்கு குடிநீர் வழங்கும் புதிய அணை நீர்மட்டம் 22.5 அடியாகவும், பழைய அணையின் நீர்மட்டம் 19.5 அடியாகவும் உயர்ந்துள்ளது. இதனால் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து கொட்டுகிறது. மேலும் நட்சத்திர ஏரியிலிருந்து அதிகளவு உபரி நீர் வெளியேறி ஏரியை சுற்றிலும் தேங்கி நிற்பதால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கனமழை காரணமாக இந்திரா நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள சின்ன பொண்ணு என்பவரின் வீட்டின் மீது 30 அடி உயரமுள்ள நடைபாதை சுவர் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. ஆனால் எந்த உயிர் சேதமும் இன்றி சின்னபொண்ணும் அவரது 3 மகள்களும் உயிர் தப்பியுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு மட்டும் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ள பொதுமக்கள் காயமடைந்தவரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில் கணவரை இழந்து தனது 3மகளுடன் தனியாக வசித்து வரும் சின்னபொண்ணுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories

Tech |