தென்காசி மாவட்டத்தில் உள்ள மலையன்குளம் பகுதியில் சாமிகண்ணு(66) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாக்கியலட்சுமி(65) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 மகன்கள் இருக்கின்றனர். இதில் கடைசி மகனான மகேஷ்(22) எழுந்து நடக்க முடியாத நிலையில் மாற்றுத்திறனாளியாக இருக்கிறார். நேற்று முன்தினம் கடையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது.
இதனால் சாமிகண்ணுவின் வீடு இடிந்து பாக்கியலட்சுமி, மகேஷ் ஆகிய இருவரும் காயமடைந்தனர். அவர்களது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அம்பை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.