ஜப்பானில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானின் தென் பகுதியான கியூஷு பிராந்தியத்தில் சென்ற வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் விளைவாக அங்கு பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
குமா நதியில் கரை புரண்டோடிய வெள்ளத்தால், கரையோரப் பகுதிகள் சர்வநாசமடைந்துள்ளது . இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் தீவிரமாக அந்நாட்டு தீயணைப்புத் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.அப்பிராந்தியத்தில் வசிக்கும் 30 லட்சத்துக்கும் அதிகமான மக்களை உடனடியாக வெளியேற ஜப்பான் அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளதாக ஜப்பான் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. இந்த பெரும் வெள்ள பாதிப்பால் சேதமான கட்டிடங்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் பற்றி ஐநா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் கவலைத் தெரிவித்துள்ளார்.