Categories
மாநில செய்திகள்

கனமழையால் சேதமடைந்த பயிர்கள்…. ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும்…. ஜி.கே.வாசன் கோரிக்கை….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் அதீத கனமழை பெய்தது. இதனால் விவசாயிகளின் பயிர் நிலங்கள் அதிக அளவில் நாசமாகியுள்ளது. இது குறித்து த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத்தை பாதுகாக்கவும் மற்றும் விவசாயிகளின் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் நிவாரணம் வழங்க வேண்டும்.

இதையடுத்து விவசாயிகள் ஒவ்வொரு ஏக்கருக்கு ரூ.30,000 வரை செலவு செய்து லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் மழையினால் மூழ்கி நாசமாகிவிட்டது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தில் இருக்கின்றனர். ஆனால் தமிழக அரசு சேதமடைந்துள்ள பயிர்களின் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.8,000 வழங்கப்படும் என்று அறிவித்தது. அதனைப்போல சேதமடைந்துள்ள சம்பா பயிர்களுக்கு இழப்பீடு குறித்த அறிவிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதவை.

மேலும்  தமிழக அரசு சேதமடைந்துள்ள பயிர்களுக்கு விவசாயிகளின் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும். எனவே பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000 இழப்பீடாக வழங்கி விவசாய தொழில் மற்றும் விவசாயகளையும் பாதுகாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |