Categories
உலக செய்திகள்

கனமழையால் நிலச்சரிவு… மண்ணுக்குள் புதைந்த இராணுவமுகாம்… 22 பேர் பலி…!!!

வியட்நாம் நாட்டில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால் இராணுவ முகாம் ஒன்று மண்ணுக்குள் புதைந்த 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வியட்நாம் நாட்டில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து கொண்டிருப்பதால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. அங்குள்ள குவாங் டிரை மகாணத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால் ராணுவ முகாம் ஒன்று மண்ணுக்குள் புதைந்தது. அதனால் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதுமட்டுமன்றி அங்கு பெரும் வெள்ளத்தில் சிக்கி ஒரே வாரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.

அப்பகுதியில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு கொண்டிருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் சிலர் மாயமாகியுள்ளனர். தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை என்னவென்று தெரியவில்லை. மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Categories

Tech |