Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கனமழையால் பல இடங்களில் மின்தடை.. பொதுமக்கள் அவதி..!!

சேலம் மாவட்டத்தில் கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. 

சேலம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நேற்று முன்தினம் இரவு அஸ்தம்பட்டி,சூரமங்கலம், அழகாபுரம், மணக்காடு, பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், குகை, அம்மாபேட்டை, பெரமனூர், அன்னதானபட்டி உள்ளிட்ட இடங்களில் சிறிது நேரம் கனமழை பெய்தது.

இந்த கனமழையால் தேவியாக்குறிச்சியில்  வசித்து வந்த விவசாயி ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் பரப்பளவு வாழை தோப்பில் இருந்த வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன. மேலும் சில இடங்களில் மரங்கள் சாய்ந்தன.

இதனால் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டு தூங்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர். சேலம் மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி 3.7 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. ஏற்காட்டில் 5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஆனால் மாவட்டத்தின் பிற பகுதிகளில் மழை எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்படத்தக்கது.

Categories

Tech |