Categories
மாநில செய்திகள்

கனமழையால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களுக்கு…. ops மற்றும் eps நிவாரணம் வழங்குதல்….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது. மேலும் கால்நடைகள் உயிர் இழந்தது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மயிலாடுதுறை மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களைக் இணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டனர். ‘

அதில் முதற்கட்டமாக கடலூர் மாவட்டத்திற்கு சென்ற அவர்கள் புவனகிரி மற்றும் சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு அரிசி, வேட்டி, சேலை மற்றும் போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். மேலும் சித்தேரி மற்றும் பூவாலை போன்ற கிராமங்களில் சேதமடைந்த நெற்பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர்.

அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியது, “கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடத்தினோம். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனுக்குடன் நிவாரண உதவிகளை வழங்கி வந்தோம். ஆனால் இந்த ஆட்சி காலத்தில் 10 மதமாக இருந்தாலும், 10 நாட்களாக இருந்தாலும் மக்களுக்கான நிவாரண உதவிகளை செய்ய வேண்டியது அரசின் கடமை ஆகும். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை” என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் பருவமழையால் பாதிக்கப்பட்ட 15 ஏக்கர் சம்பா சாகுபடி பயிர்கள் பாதிக்கப்பட்டது. மேலும் 190 க்கு மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டதையும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் கேட்டறிந்தனர். அதன்பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு மளிகை பொருட்கள், அரிசி, போர்வை மற்றும் பாய் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினர். அதன்பிறகு நாகை மாவட்டத்திற்கு சென்ற அவர்கள் கனமழையால் சேதமடைந்த 25க்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டனர். மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 60 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 மதிப்பிலான அரசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

Categories

Tech |