Categories
தேசிய செய்திகள்

கனமழையால் வெள்ளப்பெருக்கு 48 பேர் உயிரிழப்பு – 20,000 பேர் குடியிருப்புகளை இழந்தனர்

மகாராஷ்டிரா  மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 48 பேர் உயிரிழந்தனர்.

ஒரு லட்சம் லிட்டருக்கும் அதிகமான பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. மகாராஷ்டிரா  மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக புனே, சோலாப்பூர், சாங்லி, சத்தாரா உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் 20 ஆயிரம் பேர் குடியிருப்புகளை இழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கனமழை காரணமாக 48 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் லிட்டருக்கும் அதிகமான பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. சோலாப்பூர், வண்டர் பூர், புஷ்பநாத், பராமரி ஆகிய மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |