Categories
உலக செய்திகள்

கனமழையினால் வெள்ளப்பெருக்கு நிலச்சரிவு.. உயிரோடு புதைந்து பலியான மக்கள்.. இந்தோனேஷியாவில் சோக சம்பவம்..!!

இந்தோனேஷியாவில் பெய்த கனமழையினால் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 41 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தோனேஷியாவில் கிழக்கு புளோரஸ் ரீஜென்சியில் கடந்த ஞாயிற்று கிழமை அன்று அதிகாலையில் பெய்த  கன மழையினால் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். பேரிடர் நிவாரண அமைப்பு இது குறித்த தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களில் 44 நபர்கள் உயிரிழந்ததாகவும் சிலர் மாயமானதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் 50க்கும் மேற்பட்ட வீடுகள் சரிந்துள்ளது. இதுகுறித்து உள்ளூர் பேரிடர் அமைப்பின் தலைவர் லென்னி ஓலா தெரிவித்துள்ளதாவது, இதில் சுமார் 41 சடலங்கள் மற்றும் காயம் அடைந்துள்ள ஐந்து நபர்களை மீட்புப்படையினர் உடனடியாக மீட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது, ஓயாங் பயாங் என்ற கிராமத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 40 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளது. மேலும் அப்பகுதியிலிருந்து மூன்று நபர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் குடியிருப்புகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். இவர்களில் வெள்ளத்தால் சிலர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வருடமும் இந்தோனேஷியாவில் அடிக்கடி பருவகால மழை ஏற்பட்டு நிலச்சரிவு மற்றும் வெள்ளம் உருவாகி வருகிறது. இதில் ஏராளமானோர் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.

Categories

Tech |