அமெரிக்க வட கிழக்கு மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது. எனவே இந்த மழை வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தெற்கு மாகாணமான லூசியானாவில் புயல் மற்றும் சூறாவளியின் காரணமாக தீவிரமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் குயின்ஸ் ஆகிய நகரங்களின் முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆங்காங்கே சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
தாழ்வான பகுதியில் இருந்து மக்கள் வெளியேற எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் நேற்று இரவு முதலே கடுமையான மழை பெய்து வருவதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அந்த உத்தரவு இன்று இரவு முதல் அமலுக்கு வர இருக்கிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டு விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்த சில மணி நேரங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.