Categories
தேசிய செய்திகள்

கனமழை எச்சரிக்கை…. 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…. இடியுடன் கனமழை வெளுத்து வாங்கும்….!!!!

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று மத்திய கேரளா மற்றும் வட கேரளாவில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கேரள மாநிலத்திற்கு இன்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 7 மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சூர் முதல் காசர்கோடு வரையிலான ஏழு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆலப்புழா, எர்ணாகுளம்,கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் அவசர நிலையை சமாளிக்க மாநிலத்தில் 24 மணி நேர சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் பொதுமக்கள் இருபத்தி நான்கு மணி நேரமும் 1077 என்ற எண்ணை அழைக்கலாம். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் கேரளா சென்று வருகிறார்கள். மலைப்பகுதிகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |