Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கனமழை எதிரொலியாக கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு”…. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

தொடர்ந்து பெய்யும் கனமழையால் கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்பொழுது தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர் வரத்தானது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் 623 கன அடியாக இருந்தது. தற்பொழுது கிழவரப்பள்ளி அணையில் இருந்தும் மார்க்கண்டேய நதியில் இருந்தும் தண்ணீர் வருவதால் கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 5800 கன அடியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 6,100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கின்றது. இதனால் தென்பண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் வசிக்கும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. மேலும் தென்பண்ணையாற்றை கடக்கவும் குளிக்கவும் கூடாது எனவும் கால்நடைகளை ஆற்று பகுதிக்கு அழைத்துச் செல்லக்கூடாது எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.

Categories

Tech |