Categories
தேசிய செய்திகள் வானிலை

கனமழை எதிரொலி…… ஆரஞ்சு அலெர்ட் விடுத்த வானிலை மையம்…. எங்கு தெரியுமா?….!!!!

திருவனந்தபுரம்: தென்-மத்திய வங்கக்கடலில் உருவாகி உள்ள சூறாவளி சுழற்சி காரணமாக நாட்டின் தென் மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கேரளாவில் புதன்கிழமை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனால் கடலோரப் பகுதிகள், மலைப்பாங்கான பகுதிகள் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படக்கூடிய இடங்களில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. சில நாட்களில் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |