தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை கொளுத்தி வருகிறது. இந்நிலையில் கனமழை எதிரொலியாக நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களின் சில தாலுக்காக்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் உதகை, கூடலூர், குந்தா, பந்தலூர் ஆகிய 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல கோவையின் வால்பாறை தாலுகாவிலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.